REGISTERED OFFICE: NO:7, First Floor, Kundrathur Road, Porur, Chennai-600116, Ph: 044-2482 7900
தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் தமிழ்நாடு அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட, நடுவண் அரசின் திட்டகுழு மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால்பதிவு செய்யப்பட்டதன்னாட்சி அதிகாரம் பெற்ற குழுமம் ஆகும். ICDE என்கின்ற சர்வதேச குழுமத்தின் அங்கிகாரம் பெற்றுள்ளது; மற்றும் ISO 9001:2015 தர நிர்ணய சான்றிதழ் பெற்றுள்ளது .
தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் ASSOCHAM என்னும் தொழில்துறை மற்றும் கல்வி க்கான வர்த்தகசபையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் Quality Council of India என்னும் தர நிர்ணய குழுமத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் IATE என்னும் இந்திய ஆசிரியர் பயிற்சி சங்கத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது .
தமிழ்நாடு குழுமம் இயல்பு சாரா கல்வியினை திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி மூலம் வழங்குகிறது. தமிழ்நாடு குழுமம் தொடக்க கல்வி, ஆயத்த கல்வி , அடிப்படை திறந்த நிலை கல்வி ,சான்றிதழ் படிப்புகள், பட்டய படிப்புகள், முதுநிலை பட்டயப்படிப்புகள், ஆசிரியர் பயிற்சி படிப்புகள், வணிக நிர்வாக படிப்புகள், தொழில்நுட்பப்படிப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறது
தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் கீழ்க்கண்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தேர்வுகளை நடத்துகிறது.
1.தேசிய கல்வி கொள்கை, 1986 & 2016 (புதியது)
2.கல்வி உரிமை சட்டம் -2017 (மாற்றி வடிவமைக்கப்பட்டது )
3. உள்துறை அமைச்சகத்தின் (இந்திய அரசாங்கம் ) அறிவிப்பு.
4.தமிழ்நாடு கல்வி சட்டம், 1994
5. தேசிய பாடத் திட்ட கட்டமைப்பு, 2005
6. தேசிய தொழில் கல்வித் தகுதி கட்டமைப்பு
சமூக சேவையில் தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம்
தமிழ்நாடு குழுமம் பல்வேறு வகையில் சமூக தொண்டாற்றி வருகிறது
இலவச கணினி பயிற்சி முகாம் .
தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் சார்பில் இலவச கணினி பயிற்சி மற்றும் செயல்முறை வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் சிறுவர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
இலவச மர கன்றுகள் வழங்கும் விழா
தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் சார்பில் இலவச மர கன்று வழங்கும் விழா நடைபெற்றது . பெருகி வரும் வர்த்தக மையங்கள் , அதனை சார்ந்த தொழில்கள் என பல்வேறு வகைகளில் நமது சுற்றுப்புற சூழல் மற்றும் நமது வாழ்வாதாரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்காக மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதனை வலியுறுத்தி கருத்தரங்கு நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன
நெகிழியின் தீமைகள்`: கருத்தரங்கு
நெகிழி பல்வேறு நச்சுப் பொருள்கள் அடங்கிய அழியா அரக்கன் . இந்த நஞ்சு சிறிது சிறிதாக பரவி சுற்று சூழலை மாசுபடுத்துகிறது. இதனால் மனித இனமே மெல்ல சாகும் நிலை ஏற்படும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். நெகிழியின் தீமைகளை வலியுறுத்தி கருத்தரங்கினை தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் நடத்தியது. இது ஆசிரியர், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்ச்சி பெறவும் நெகிழி பயன்பாட்டினை நிறுத்துவதற்கும் ஆயத்த பணிகளை துவக்கவும் பெரும் பங்கு வகித்தது . நன்மை நல்கும் இயற்கை சார் பொருள்களை பயன்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இளம்சிறார் ஓவியப் போட்டி
இளஞ்சிறாருக்கான ஓவியப் போட்டியினை தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் நடத்தியது. சிறந்த கருத்துள்ள ஓவியங்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விசைப் பலகை மூலம் தன் இசை மேதைமையை காட்டிய சிறுவனுக்கும் பரிசு வழங்கப்பட்டது .
இளம்சிறார் அபாகஸ் போட்டி
கணக்கு பாடங்களை விரைவாக முடிக்க பெரிதும் துணை புரிவது அபாகஸ் ஆகும் . இதனை விரைவாக முடிக்க பயின்ற மாணவரிடையே போட்டி வைக்கப்பட்டது .இதில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
கணினி வன்பொருள் பயிற்சி முகாம்
கணினி வன்பொருள என்பது நாம் பயன் படுத்தும் அத்துணை கணினிக்குள்ளும் மறைவாக இருக்கும். இதன் இயக்கங்களை சரியாக தெரிந்து கொண்டால் எந்த ஒரு சிக்கலாக இருந்தாலும் நாமே சரிசெய்து விடலாம் . இதற்காக இலவச கணினி வன் பொருள் பயிற்சியினை தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் அளித்தது . மாணவருகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது .
ஆசிரியர் திறன் ஆய்வு தேர்வு
ஆசிரியர் திறன் மதிப்பீடு செய்யும் திறன் ஆய்வு தேர்வு தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் நடத்தியது.
திறன் தேடல் போட்டி
மாணவர்களுக்கான திறன் தேடல் போட்டி தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் நடத்தியது. சிறந்த திறமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
சர்வதேச யோகா தினம்
யோகா செய்வது நமது மனம், உடல், உணர்வு அனைத்தையும் ஒன்று இணைத்து ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி வகுக்கும். இதற்காக சர்வதேச யோகா தினமான 21-06-2018 அன்று இலவச யோகா பயிற்சி தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு வழங்கியது. இதனால் பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெற்றனர்.
சுதந்திர தின விழா மற்றும் கருத்துரை விளக்க விழா15-08-2018 அன்று 72வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று மரம் வளர்ப்போம் என்ற தலைப்பில் மாணவ பெருமக்கள் சிறப்பாக கருத்துரை விளக்கம் அளித்தனர் . மரம் நடுதலின் இன்றியமையாமை, பயன்கள் , நீராதாரங்கள் அவற்றின் மூலம், மனிதன் இயற்கை சார்ந்து வாழ்க்கை நடத்திய பாங்கு, இப்
TAMILNADU COUNCIL FOR OPEN AND DISTANCE LEARNING
Registered under Government Act, Tamilnadu and Approved by International Council for Open and Distance Learning, Oslo, Norway A Member of Indian Association of Teacher Educators (IATE), Quality Council of India (QCI) & A Member of ASSOCHAM, India. Ministry of External Affairs (MEA), Govt. of India accepts for Attestation of TCODL Certificates
Thursday, 8 October 2015
TAMILNADU COUNCIL FOR OPEN AND DISTANCE LEARNING
Subscribe to:
Posts (Atom)